Tuesday, 20 September 2011

உளைவு

தலையிடிக்கிறது இப்போதெல்லாம் 
கொஞ்சம் அதிகமாக ,
தூக்கமாத்திரை இல்லாத 
இரவுகள் இனி 
இல்லாமல் போகுமோ ?
பயமாய் இருக்கிறது ........
வாசிப்புக்காய் தலையணை அருகிருக்கும்
புத்தகத்தை தொட்டால் ,
அறையெங்கும் ஓலமிடுகிறது _என்னால்
கோர்க்க இயலாமல் போன 
சொற்கள்  ௬ட்டம் ௬ட்டமாக ,
காதடைக்கும் ஒலி கடந்து 
 ஒளியனைத்து  விழி மூடினால் ,
ஏதேதோ படர்வுகள் இருளுள்ளே 
உதறவும் முடியாமல் உணரவும்  முடியாமல் ........
அறுந்தறுந்து வரும்_அந்த  
நினைவுநிழல்கள் அனுங்கிக்கொண்டு 
தற்கொலை செய்கின்றன .....
எங்கும் சகிக்க முடியாத மயான 
எரிதலின் வாசம் பரவ 
கைகளால் இறுக்கிக்கொள்கிறேன் தலையை ,
நிலவும் நீள் நிசப்தத்தில் 
அந்தரங்கமாய் அழுதுமுடிகையில்
அநாதரவாய் அந்தரத்தில் 
நிற்கிறது  ஒரு பெரும் சுமை .................
முகத்திலறையும் நிராகரிப்பை விட 
மிக மிக கேவலமாய் 
குனிந்து கொள்கிறேன் 
இன்றைய தூக்கமும் 
இல்லாமல் போகிறது ,
நேற்றையைப்போல .............................







1 comments:

  1. தூக்கமில்லாத இரவுகளில் வரும் மன உளைச்சல்கள். துயரங்க களை பகிருங்களது பாதியாகும்

    ReplyDelete