Saturday, 24 October 2009

எப்படி இருக்கிறாய்

எண்ணகோலங்களில்
வண்ணமிழைத்து போனவளே ........
வாசனை பூசியென்
நினைவுகளுக்கும்
வாசமூட்டிச்சென்றவளே ..................
எப்படி இருக்கிறாய் ?    
 

கனவுகளில் கரைந்தும்
உணர்வுகளால் சொல்லியும் _ஏன்
உறவுகள் திட்டியும்
தெரிந்து போன
என்மீதான காதலை நீயும்
உன்மீதான காதலை நானும்
மறைத்துக்கொண்டே சிரித்துக்கொண்ட _அந்த
பொழுதுகளை ................

                                                           எதோ நினைவுகளில் மூழ்கி
                                                           எக்குத்தப்பாய் சந்தியிலிருந்து
                                                            சிந்திக்குமென்னை
                                                           பித்தனாகிடுவானோ என்று
                                                           சைக்கிள் மணியடித்து _என்
                                                           நினைவு திருப்பிய வேளைகளை ....................

சொல்லவந்தும் சொல்லமுடியாமல்
அந்த இந்த கதைகளை உன்னிடம்
கேட்டுக்கொண்டே _மனதால்
திட்டிக்கொண்டிருந்த
சந்தோச மணித்துளிகளை ..................
நீவரும் நேரமேது என்று தெரிந்தே
தெரியாததாய் காத்திருந்தும்
இருப்பான் என நம்பி நீ வரும்போது
மறைந்திருந்து உன் முகவாட்டம்
கண்டுமகிழ்ந்ததும் ........................
இப்படியாகஇன்னும்,
 வாழ்ந்து கொண்டிருக்கிறேன் _உன்
நினைவுகளுடனும் ...............
சொல்லாமல் கொண்டுவந்த காதலுடனும் ....................
நீ எப்படி இருக்கிறாய் தோழி ?
                                      


3 comments:

  1. தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

    ReplyDelete
  2. இருப்பான் என நம்பி நீ வரும்போது......

    நிச்சயம் காதல் நிறைவேறும்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமையான வரிகள் நிச்சயம் உங்க காதல் வெற்றி பெறும்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete