Saturday, 30 May 2009

வேரோடி மீண்டேழுவான்

எச்சங்களின்றி _எம்
சொந்தங்களை அழித்தவன்
மிச்சமின்றி _எம்
சொத்துக்களை அழித்தவன்
பேயிருள் சூழ
எம்மவர் உடலங்கள்
மீதேறி எக்காளமிடுகிறான்.
சாம்பல் மேடுகளும்
சிதைச்சிதைவுகளுமே
தேசத்தின் இடுகுரியாக்கி
ஆர்ப்பரிக்கிறான் _எம்
மூதாதை முடிகொண்டாண்ட நிலத்தில்
தன் கொடிநிற்கிறான் .
இதயவலிகளைத்தந்துவிட்டு
வெற்றிவாகை கொண்டாடும்
பகையே ...........
வங்கக்கடலலைகள் ஓய்வதுமில்லை !
வந்து மோதும் தென்றல்
சிதைந்து போவதுமில்லை!
காரிருள் சூழ்ந்தாலும்
கதிரழிந்து போவதில்லை _இவைபோல்
தமிழன் தளர்வதுமில்லை
தலை குனிவதுமில்லை
புறங்கையால் புறந்தள்ளி
போர் திறந்காத்து
வேரோடி மீண்டேழுவான்
சாயாத தமிழ் வீரம்
ஓயாத அலையாகி பரிணமிக்கும் ._இனி
பூகம்ப அதிர்வோடு
வேடுதலை தேடி பயணிக்கும்

0 comments:

Post a Comment