Wednesday, 15 April 2009

ஆதலால் கண்ணே

இடைவெளிகள் நிரப்ப
படயலாகின்ற வரிகள் இவை ,
நடைபயிலும் பொன்மயிலே _இந்த
கடைவிரிப்புக்கொரு
பதில் கொடு !
கலைகின்ற போதில்
உதிர்கின்றபாக்கள் இவை .
கலைமானே _இங்கு
கொஞ்சம் கவனி
தூண்டியுதுன் விழிகள்தான் _எனை
வாட்டியதும்உன் விழிகள்தான் .
காட்டியதுன் மொழிகள்தான் _ஆசை
ஊட்டியதும் உன் மொழிகள்தான் .
அலைவித்ததுன் அசைவுகள்தான் _உயிர்
கலைவித்ததும் உன் அசைவுகள்தான் .
சித்தத்துள் நிதம்
சித்துக்கள் செய்யும்
சித்திரப்பாவையே _இந்த
யுத்தப்போர்வை விலக்கு,
கருத்துள் காதல்
குருத்துக்களை (க) உ ருவாக்கிய
திருமகளே _இங்கு
கொஞ்சம் திரும்பு .
வேண்டலில்லையாதலால்_எதுவும்
கிடைத்தலில்லை !
தயக்கம் கொள்வதால் _என்றும்
வெற்றி கொள்வதுமில்லை !
இதுவொன்றும்
ஒரு வழிப்பாதையில்லை.
ஆதலால் கண்ணே .................
விலங்குடைத்துன்
திருவாய் மொழிகள் பகர் .

0 comments:

Post a Comment