Wednesday, 25 March 2009

மீண்டொரு முறை

ஊற்றெடுக்கும் நினைவுகள்
உடைந்தழவைக்கும்
கோர்வையில்லாமல்
வந்துவிழும்
எண்ணப்பூக்களை
எண்ணிப்பார்த்தே _விழிகள்
பூத்துக்கொள்ளும் _தனை
ஏக்கத்தில்
மூடிக்கொள்ளும் .
நெல் கொழித்த நேற்கொழுவில்
நேற்றுவரை
கற்றுணர்ந்த சந்தொசபோழுதுகள்
இன்னும் எனை
வாழவைக்கும்
விழுதுகள் .
வயல்வெளியும் _வத்தாகிணறும்
வல்லைதாண்டி வரும்
உப்புக்காற்றும்
பந்தடி வேட்டையும்
பருவக்குமர்களும்
பாலர் முதல்படுத்தெழுந்த
ஆலமர மடமும் _அருகமைந்த
துலா கிணறும்
அந்த வைரவரும்
அம்மா வளர்த்த ஆடுகளும் _அவை
அம்மாவை அழைத்த குரல்களும்
நினைவுகளுள்
நர்த்தனமாடுகையில்
நினைவிழந்துபோகிறது
எல்லாமும் ,
ஆற்றுப்படுத்தவும் _எனை
மாற்றிக்கொள்ளவும் முடியாமல்
மருகிக்கொள்கிறேன்_
எனக்குள்ளேயே
கருகிக்கொள்கிறேன்.
உருக்கொள்ளில்_மீள
உயிர் கருக்கொள்ளில்
மீண்டோருமுறை _என்
மேனி தடவிடல் வேண்டும்
அந்த வல்லைக்காற்று .



1 comments:

  1. உங்கள் கவிதனை வாசிக்கும் போது!
    கண்களுக்குள் நர்த்தனமிடும் நினைவுகள் அதனால் கண்ணுக்குள் நீருற்றெடுக்கம்

    வத்தாக் கிணற்றிலே குளிக்கும் சுகம் வேறெதிலுமுண்டோ!

    ReplyDelete